மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

காங்கோ: ஏரியில் படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி!

கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி....

At least 12 dead, dozens missing after vessel capsizes in eastern Congo's Lake Kivu

கோப்புப்படம்.

Published On :

கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் வியாபாரிகளை சனிக்கிழமை இரவு ஏற்றிச் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் பலியானதாகவும் பலரைத் காணவில்லை என்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள இட்ஜ்வி தீவில் இந்தப் படகு கவிழ்ந்தபோது அதில் 50 பேருக்கும் அதிகமானோர் பயணம் செய்ததாக, விபத்து நடந்த பகுதிக்கு அருகிலுள்ள கிஷேகே கிராமத்தின் தலைவர் ஃபெலிக்ஸ் ஹபிராகி தெரிவித்தார். சுமார் 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இட்ஜ்வி தீவின் புவினாவிலிருந்து போசாவிற்கு மீன் வியாபாரிகளையும் பொருட்களையும் இந்தப் படகு ஏற்றிச் சென்றதாக உள்ளூர் நிர்வாகி முஹிண்டோ பாஸ்கல் தெரிவித்தார்.

காங்கோவில் நூறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போக்குவரத்துக்காக நதிகளையும் ஏரிகளையும் பெரிதும் நம்பியுள்ள நிலையில், அங்கு இதுபோன்ற படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாக உள்ளது.

Summary

A vessel carrying traders capsized in Lake Kivu in eastern Congo, killing at least 12 and leaving dozens missing, authorities said Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.