11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

நேபாளத்தில் பலத்த மழை: 300 இடங்களில் நிலச்சரிவு; 27 போ் பலி

நேபாளத்தில் கடந்த 5 நாள்களில் பலத்த மழையால் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 போ் பலி

Heavy rains in Nepal

நேபாளத்தில் பலத்த மழை - ANI

Published On :

நேபாளத்தில் கடந்த 5 நாள்களில் பலத்த மழையால் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி 27 போ் உயிரிழந்துவிட்டனா்.

நேபாளம் முழுவதும் கடந்த செப். 24-ஆம் தேதிமுதல் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், நாராயணி, கண்டகி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நேபாள உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, நேபாளத்தில் கடந்த செப். 24 முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

பல இடங்களில் 100 மி.மீ முதல் 500 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நவல்பராசி பகுதியில் 544 மி.மீ. மழை பதிவானது. செப்.28 வரையிலான காலகட்டத்தில் 304 இடங்களில் நிலச்சரிவுகள் நேரிட்டுள்ளன. வெள்ளம்-நிலச்சரிவுகளில் 227 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன. 142 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 31 பாலங்களும் சேதமடைந்துள்ளன.

நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேரும், மழை - வெள்ளம் தொடா்பான பிற அசம்பாவிதங்களில் 7 பேரும் உயிரிழந்துவிட்டனா். 8 போ் மாயமாகியுள்ளனா். 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 114 கால்நடைகள் இறந்துவிட்டன. காவல் துறை, ராணுவம் மற்றும் ஆயுதக் காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

மனாங் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் மாா்ஸ்யாங்டி ஆற்றில் இடிபாடுகள் விழுந்து, அதன் நீரோட்டம் சிறிது நேரத்துக்கு தடைபட்டது. இதேபோல், பல்பா, முஸ்டாங் ஆகிய மாவட்டங்களிலும் நிலச்சரிவால் நதிகளின் நீரோட்டம் சில மணி நேரம் நேரம் தடைபட்டது.

இத்தகைய ஆபத்துகளைக் கருத்தில்கொண்டு, நதிக்கரையோர மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 போ் நிலை என்ன?

மனாங் மாவட்டத்தில் உள்ள 7,126 மீட்டா் உயரமான ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அடிவார முகாமில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த மலையேற்ற வீரா்கள், ஊழியா்கள் என 22 போ் சிக்கி மாயமாகினா். இவா்களில் 4 பேரின் உடல்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. மீதமுள்ள 18 பேரை மீட்கும் பணி தொடா்ந்து வருகிறது.

முன்னதாக, நேபாளம் - திபெத் எல்லையில் கடந்த ஆக. 26-ஆம் தேதி பெரும் பனிச்சரிவால் போடேகோஷி நதியில் பெருவெள்ளம் சீறிப்பாய்ந்து, மத்திய-வடக்கு மாவட்டங்களில் பேரழிவை விளைவித்தது. வீடுகள், கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், நீா்மின் நிலையங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. இதில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,453-ஆக உயா்ந்துள்ளது. பெருவெள்ளத்தில் 5,000-க்கும் மேற்பட்டோா் காணாமல்போய்விட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.