மேற்கு ஆசியாவில் புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிடும் ஈரான்!
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தத் ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பஹாரெஸ்தான் சதுக்கத்தில் செப். 28 அன்று 1980-88 ஈரான் - ஈராக் போர் தொடங்கியதன் நினைவைக் குறிக்கும் வகையில் அந்நாட்டின் தேசியக் கொடியின் கீழ் ஈரானின் ஏவுகணை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவு தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலுக்காகக் ஈரான் காத்திருக்கிறது.
அதேநேரம், தனது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்த மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் புதிய தாக்குதல்களை நடத்தவிருப்பதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
ஈரானின் முன்மொழிவை டிரம்ப் ஏற்கனவே நிராகரித்துவிட்டார். ஆனால், வரும் நாள்களில் அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலை எதிர்பார்ப்பதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இரு நாடுகளிடையே சமீப நாள்களில் தாக்குதல்கள் நடைபெறவில்லை என்றாலும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைக் குறிவைத்து வருகிறது. அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக பொருளாதார அழுத்தப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடுகளின் உள்கட்டமைப்புகளும் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃ அச்சுறுத்தியுள்ளார்.
அவர் பேசிய காணொலி ஒன்றில், “நாம் எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியாத பிராந்தியத்தில், வேறு யாரும் அதனை செய்யமுடியாது. நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது” என்று எச்சரித்துள்ளார். மேலும், புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரானின் சமீபத்திய சமீபத்திய முன்மொழிவை டிரம்ப் நிராகரித்த பின்னரும், அமெரிக்கா-ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்த நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
Summary
Iran is planning to launch new attacks on countries in the West Asian region.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







