கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 10-ஆம் தேதி இறந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் கரோனா குறித்த அச்சம் பரவலாக காணப்படுகிறது. அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று சோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த 4 பேரில் ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, கலபுர்கி மாவட்ட ஆட்சியர் சரத் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் கர்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


