பாகம்-5: நீங்கள் வாங்கும் சொத்தை பதிவு செய்ய ஆகும் செலவுகள் என்னென்ன?

பாகம்-5: நீங்கள் வாங்கும் சொத்தை பதிவு செய்ய ஆகும் செலவுகள் என்னென்ன?

இந்த அத்தியாயத்தில் பதிவுத்துறையில் கட்ட வேண்டிய கட்டண விவரங்கள் மற்றும் தயாரிப்பு செலவுகள் பற்றி பார்ப்போம்.

இதுவரை சொத்து சம்மந்தமாக வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் பதிவுத்துறை ஆவணங்கள் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் பதிவுத்துறையில் கட்ட வேண்டிய கட்டண விவரங்கள் மற்றும் தயாரிப்பு செலவுகள் பற்றி பார்ப்போம்.

சொத்தின் ஆவணத்தை யார் தயாரிக்கலாம்

  • வழக்கறிஞர்கள்

  • உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள்.

  • ஆவண எழுத உரிமம் வைத்திருக்கும் பட்டய கணக்காளர்கள் (Chartered Accountants)

சொத்தின் ஆவணத்தை பதிவுத் துறையில் பதிவு செய்ய் கட்ட வேண்டிய கட்டணகள்:

ஆவணத்தின் வகை

முத்திரைக் கட்டணம்

பதிவுக் கட்டணம்

1 விற்பனை ஆவணம்

Conveyance (Sale)

சந்தை மதிப்பில் 7%

 

சந்தை மதிப்பில் 4%

2 பரிசு (Gift )  

 

3 பரிமாற்றம் (Exchange)

சந்தை மதிப்பில் 7%

சந்தை மதிப்பில் 4%

4 எளிய அடமானம்

Simple Mortgage

கடன் தொகையில் 1% அதிகபட்சமாக ரூ. 40,000/- 

கடன் தொகையில் 1% அதிகபட்சமாக ரூ.10,000/-

5 சுவாதீனத்துடன் கூடிய அடமானம்

(Mortgage with possession)

கடன் தொகையில்  4%

கடன் தொகையில் 1% அதிகபட்சமாக ரூ. 2,00,000/-

6 விற்பனை ஒப்பந்தம்

(Agreement to Sale)

ரூ.20

முன்பண தொகையில் 1% அல்லது 1% மொத்த விலையில் 1%(சுவாதீனம் பெற்றால்)

7. கட்டிடம் கட்ட ஒப்பந்தம்

(Agreement relating to construction of building)

முன்மொழிந்த கட்டிடத்தின் விலையில் 1% அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுமான மதிப்பில் 1% (இதில் எது அதிகமோ அந்த தொகை)

முன்மொழிந்த கட்டிடத்தின் விலையில் 1% அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுமான மதிப்பில் 1% (இதில் எது அதிகமோ அந்த தொகை)

8 நீக்கம்

 Cancellation

ரூ.50

ரூ.50

9 பாகப்பிரிவினை (Partition)

i) குடும்ப உறுப்பினர்களுக்குள் பாகப்பிரிவினை (Partition among family members)

சந்தை மதிப்பில் 1% அதிகபட்சமாக ஒவ்வொரு பாகத்திற்கும் ரூ. 25,000/- மிகாமல்

சந்தை மதிப்பில் 1% அதிகபட்சமாக ஒவ்வொரு பாகத்திற்கும் ரூ. 4,000/- மிகாமல்

ii) குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்குள் பாகப்பிரிவினை (Partition among Non family embers)

ஒவ்வொரு பாகத்திற்கும்

சந்தை மதிப்பில் 4%

ஒவ்வொரு பாகத்திற்கும்

சந்தை மதிப்பில் 1%

10 அதிகார ஆவணம் (Power of Attorney)

i) பொது அதிகார ஆவணம்(விற்பதற்கு)

(General Power of Attorney to SELL the immovable property)

ரூ. 100

ரூ.10,000

ii) பொது அதிகார ஆவணம் (விற்பதற்கு) குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டால்)

General Power of Attorney to SELL the immovable property (Power is given to family member)

ரூ. 100

ரூ.1,000

iii) பொது அதிகார ஆவணம்(விற்பதற்கும் மற்ற விசயங்களுக்கும்)

General Power of Attorney to SELL the movable property & for other purposes

ரூ. 100

ரூ.50

iv) பொது அதிகார ஆவணம்(விலைக்கு)

General Power of Attorney given for consideration

சொத்தின் விலையில் 4%

சொத்தின் விலையில் 1%

11 செட்டில்மெண்ட்

(Settlement)

 

 

i) குடும்ப உறுப்பினர்களுக்குள்

In favour of family members

சந்தை மதிப்பில் 1% அதிகபட்சமாக ரூ. 25,000/- மிகாமல்

சந்தை மதிப்பில் 1% அதிகபட்சமாக ரூ. 4,000/- மிகாமல்

ii) மற்ற விசயங்களில்

(Other Cases)

சந்தை மதிப்பில் 7%

சந்தை மதிப்பில் 4%

12. கூட்டு ஆவணம் (Partnership deed )

i) முதலீடு ரூ.500 க்கு மிகாமல்

ரூ. 50

முதலீட்டில் 1%

ii) மற்ற விசயங்களில்

Other Cases

ரூ. 300

 

13. தலைப்பு பத்திரத்தின் வைப்பு

(Deposit of Title Deed)

கடன் தொகையில் 0.5%

கடன் தொகையில் 1% அதிகபட்சமாக ரூ.5000/-

14 விடுதலை (Release)

i) குடும்ப உறுப்பினர்களுக்குள்

Release among family members (co - parcenars)

சந்தை மதிப்பில் 1% அதிகபட்சமாக ரூ. 25,000/- மிகாமல்

சந்தை மதிப்பில் 1% அதிகபட்சமாக ரூ. 4,000/- மிகாமல்

ii) குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் 

Release among non family members (co - owner & benami release)

சந்தை மதிப்பில் 7%

சந்தை மதிப்பில் 1%

15  குத்தகை (Lease)

30 வருடங்களுக்குள்

Lease below 30 years

வாடகை, ப்ரீமியம், கட்டணத்தில்1% (1 %   on the total amount of rent, premium, fine etc)

1% அதிகபட்சமாக ரூ. 20,000/- மிகாமல்

99 வருடங்களுக்குள்

Lease upto 99 years

வாடகை, ப்ரீமியம், கட்டணத்தில் 4%

4 %  on the total amount of rent, premium, fine etc

1% அதிகபட்சமாக ரூ. 20,000/- மிகாமல்

99 வருடங்களுக்கு மேல்

 

Lease above 99 years

வாடகை, ப்ரீமியம், கட்டணத்தில் 7%

7%  on the total amount of rent, premium, fine etc

1% அதிகபட்சமாக ரூ. 20,000/- மிகாமல்

16. அறக்கட்டளை பிரகடனம் (சொத்து இருந்தால் விற்பனையாக கருதப்படும்)

Declaration of Trust (if property is there, it would be considered as sale)

ரூ. 180

தொகையில்1%

{pagination-pagination}

வில்லங்கச்சான்று கட்டணம்

ஒரு சர்வே எண்ணுக்கான கட்டணம்

வில்லங்கச்சான்று விண்ணப்பக் கட்டணம்

ரூ.1/-

ஒரு வருடம் தேடுதலுக்கு

ரூ.30/-

ஒவ்வொரு கூடுதல் வருட தேடுதலுக்கு

ரூ. 10/-

கணிணி ஆக்கப்பட்ட கால தேடுதலுக்கு...அதாவது 1987 ஆண்டு முதல்

Rs.100/-


கணிணி ஆக்கப்படாத கால - அவசர வில்லங்கச்சான்று

இரு மடங்குக் கட்டணம்

முத்திரைத்தாள் (Stamp paper)

  • அங்கீகரிக்கப்பட்ட முத்திரைதாள் விற்பனையாளர்களிடம் வாங்க வேண்டும்.

  • முத்திரைத்தாள் மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் முத்திரைதாள் விற்பனையாளர் மீது குற்றநடவடிக்கை எடுக்கப்படுவதுடன், முத்திரைதாள் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்

  • முத்திரைதாள் சார்-பதிவாளர், கருவூலம், உதவி கண்காணிப்பாளர், முத்திரைதாள், சென்னை ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

  • முத்திரைத்தாள் பணமாகவோ அல்லது வரைவோலயாகவோ செலுத்தலாம்.

  • சென்னை மற்றும் பல இடஙகளில் மின்னணு-முத்திரைத்தாள் வசதி உள்ளது.

சான்றிட்ட நகல் (certified copies)

  • விற்பனை ஆவணம், பரிமாற்றம், அடமான ஆவணங்களின் சான்றிட்ட நகலை பெற எவரும் விண்ணப்பிக்கலாம்.

  • உயில் நகலை உயில் எழுதி வைத்தவர் மட்டுமே பெறமுடியும். 

  • உயில் எழுதிவைத்தவர் இறப்பிற்குப் பின் எவரும் பெறலாம்.]

  • அதிகார ஆவண நகலை தரப்பினரோ அல்லது சொத்தை வாங்க விரும்பும் ஒருவரோ மட்டுமே பெறமுடியும்

  • சான்றிட்ட நகல் விண்ணப்பித்து 3-வது நாள் கிடைக்கும்.

    {pagination-pagination}

சான்றிட்ட நகலுக்கான கட்டணம்

விண்ணப்பக் கட்டணம்

ரூ   1/-

முதல் வருட தேடுதலுக்கு

ரூ.10/-

ஒவ்வொரு கூடுதல் வருடங்களுக்கு

ரூ.  5/- 

STAR வழியாக

Additional Fees Rs.100/-

நகல் கட்டணம்

(i) சான்றிட்ட நகல் Scanning:
முறையி;ல் செய்தால் (ஒவ்வொரு பக்கத்திற்கும்)

ரூ.10/-

(ii) சான்றிட்ட நகல் Scanning:
முறையி;ல் செய்யும் போது

a) பக்கத்தில் 300 வார்த்தைகளுக்கு 

b) பக்கத்தில் 500 வார்த்தைகளுக்கு 

 



பக்கத்திற்கு ரூ.2/- (குறைந்த பட்சம் ரூ.5/-)

100 வார்த்தைகளுக்கு ரூ.0.40 (குறைந்த பட்சம் ரூ.5/-)

(iii) சான்றிட்ட நகல் கையெழுத்தில் தயார் செய்யும் போது, 100 வார்த்தைகளுக்கு

ரூ.1/-

ஆவண எழுத்தரின் கட்டணங்கள் (DOCUMENT WRITERS FEE)

பதிவுச் சட்டம், 1908 பிரிவு. 89-B இன் படி உருவாக்கப்பட்ட தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் விதி, 1982 இல் திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட, அரசாணை G.O. Ms. No.49, வணிகவரி மற்றும் பதிவுத்துறை (M2) நாள். 15,04-2010 இன் படி ஒரு ஆவண எழுத்தர் வசூலிக்க வேண்டிய கட்டணம்

விதி. 14 (4) கட்டண விவரங்கள்

I. சொத்து மாற்ற ஆவணங்களுக்கு:-

(விற்பனை, பரிமாற்றம், செட்டில்மெண்ட், தானம்)

எண்.

விவரம்

கட்டணம்

1

ஆவணத்தில் குறிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.10,000 க்கு மிகாமல் இருக்கும் போது

ரூ. 50/-

2

ஆவணத்தில் குறிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.10,000 க்கு மேல் ரூ 50,000/- வரை

ரூ. 100/-

3

ஆவணத்தில் குறிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.50,000 க்கு மேல் ரூ 1,00,000/- வரை

ரூ. 150/-

4

ஆவணத்தில் குறிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.1,00,000 க்கு மேல் ரூ 2,00,000/- வரை

ரூ.200/-

5

ஆவணத்தில் குறிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.2,00,000 க்கு மேல் ரூ 5,00,000/- வரை

ரூ. 300/-

6

ஆவணத்தில் குறிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.5,00,000 க்கு மேல்

ரூ.400/-

II (a).     பின்வரும் ஆவணங்களுக்கு கட்டணம்  

எண்.

விவரம்

கட்டணம்

1

ஆவணங்கள் வைப்பு (Deposit of  title deeds)

ரூ. 100/-

2

குத்தகை ஆவணம் (Lease deed)

ரூ. 100/-

3

அடமான ஆவணம் (Mortgage deed)

ரூ. 100/-

4

விடுதலை ஆவணம் (Release deed)

ரூ. 100/-

5

அறக்கட்டளை ஆவனம் (Trust deed)

ரூ. 100/-

6

பங்கு ஆவணம் (Partnership deed)

ரூ. 100/-

{pagination-pagination}

 II (b).     பின்வரும் ஆவணங்களுக்கு கட்டணம் -  

எண்

விவரம்

கட்டணம்

1

ஒப்புதல் (Acknowledgement)

ரூ. 50/-

2

ரசீது (Receipt0

ரூ. 50/-

3

அளிப்பீடு (Award)

ரூ. 50/-

4

நீக்கம் (Cancellation)

ரூ 50/-

5

விவாகரத்து (Divorce)

ரூ. 50/-

6

அதிகார ஆவணம்(Power of Attorney)

ரூ 50/-

7

புரோநோட்டு (Pronote)

ரூ. 50/-

8

ஒப்பந்தம் (Agreement)

 Rs. 50/-

III.             பாகப்பிரிவினைப் பத்திரம் :-  

எண்

விவரம்

கட்டணம்

1

ஆவணத்தில் இரண்டு செக்குபந்தி வரை

ரூ. 200/-

2

ஆவணத்தில் இரண்டு செக்குபந்திகளுக்கு மேல்

ரூ. 100/-

3

அதிகபட்ச கட்டணம்

ரூ. 500/-

  IV.           கட்டிடங்களுக்கு:-  

எண்

விவரம்

கட்டணம்

1

(1-A) of rule 3 of the Tamil Nadu Stamp (Prevention of under valuation of Instruments) Rules, 1968. இன் படி வீட்டை அளந்து விவரக்குறிப்பு தயார் செய்ய

ரூ. 100/-

(ஒவ்வொரு 1-A விவரக் குறிப்புக்கும்)

தொடரும்………..

C.P.சரவணன், வழக்கறிஞர்
தொடர்புக்கு - 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com