மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

புயல் சீரமைப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில், கஜா புயலால் பாதிப்புக்குள்ளான கிராமங்களில் நடைபெற்று வரும்

News image
Updated On :4 ஜனவரி 2019, 3:10 am

DIN

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில், கஜா புயலால் பாதிப்புக்குள்ளான கிராமங்களில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பழங்கள்ளிமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், நாலுவேதபதி, வானவன்மகாதேவி கிராமங்களில் புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நவீன மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு, மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுவதை அவர் பார்வையிட்டார். பின்னர், கோவில்பத்து கிராமத்தில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த அவர், அதன் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் வி. செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், வெற்றிச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.