அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சுரங்க அறிக்கையை தயாரித்ததுதான் எனது சிறந்த பணி

பெல்காம், பிப். 10: சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக அறிக்கையை தயாரித்ததுதான் நான் செய்த சிறந்தப் பணி என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார். பெல்காமில் வியாழக்கிழமை நடைபெற்ற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:06 pm

தினமணி

பெல்காம், பிப். 10: சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக அறிக்கையை தயாரித்ததுதான் நான் செய்த சிறந்தப் பணி என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.

பெல்காமில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி விழாவில் அவர் பேசியது:

மாநில லோக் ஆயுக்த நீதிபதியாக பணியாற்றிய போது, சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக நான் தயாரித்து அளித்த அறிக்கைதான் எனது பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சுரங்க அறிக்கை தயாரித்தபோது அதற்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், நானோ, என் மனைவியோ அதற்கு இணங்கவில்லை.

ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து ஊழலை ஒழிக்கத் தவறினால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.

அடுத்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்றார்.

பின்னர், மாணவர்களுடன் ஹெக்டே கலந்துரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.