அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்கள் ஆலோசனை

எதிர்கால அரசியல் செயல்பாடு குறித்து ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்கள் பெங்களூரில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.

Published On :

எதிர்கால அரசியல் செயல்பாடு குறித்து ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்கள் பெங்களூரில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.

பெங்களூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மை.சா.ஜெயதேவா, சந்தோஷ், பாஜக தலைவர்கள் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர், மத்திய அமைச்சர் சதானந்தகெளடா, முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, கட்சியின் மாநிலத் தலைவர் பிரஹலாத்ஜோஷி, எம்எல்ஏ சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெகுவிரைவில் நடக்கவுள்ள வட்டம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு, அதற்கான வியூகங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மகதாயி-மலபிரபா நதிநீர் இணைப்புத் திட்டம், கலசா-பண்டூரி கால்வாய்த் திட்டங்களை அமல்படுத்த கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னையில் தலையிட்டு தீர்வுகாண, பிரதமர் நரேந்திரமோடி முன்வரவேண்டுமென விவசாயிகள் கோரி வருவது குறித்தும் கூட்டத்தில் அலசப்பட்டது.

இந்த திட்டங்களை செயல்படுத்த, விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டங்களால், பாஜகவுக்கு ஏற்படும் சாதக-பாதகங்கள், இப் பிரச்னையை பாஜகவுக்கு சாதகமாக மாற்றுவது ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. 2-ஆம் கட்ட விவசாயிகள் ஊக்குவிப்பு மாநாடுகள் நடத்துவது குறித்து விவாதம் நடந்தது. பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெற்றிருந்தும் மேயர், துணை மேயர் பதவியைக் கைப்பற்ற இயலாமல் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதும், அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அலட்சியமாக இருந்தது குறித்து ஆர்எஸ்எஸ் அதிருப்தி தெரிவித்தது. எனினும், காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக முன்னெடுக்க வேண்டிய அரசியல் நகர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.