ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

இன்று முதல் வாக்காளர் பட்டியலை திருத்த வாய்ப்பு

பெங்களூரு நகர மாவட்டத்துக்குள்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் வாக்காளர் பட்டியலைத் திருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Published On :

பெங்களூரு நகர மாவட்டத்துக்குள்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் வாக்காளர் பட்டியலைத் திருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெங்களூரில் திங்கள்கிழமை பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியர் வி.சங்கர் கூறியது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 2016 ஜன.1-ஆம் தேதி அன்று திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலை திருத்தியமைக்கும் பணி செப்.15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.

பெங்களூரு நகர மாவட்டத்துக்குள்பட்ட எலஹங்கா, பேட்ராயனபுரா, யஷ்வந்த்பூர், தாசரஹள்ளி, மகாதேவபுரா, பெங்களூரு தெற்கு, ஆனேக்கல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் குறித்து அக்.14-ஆம் தேதி வரை மனுக்களை அளிக்கலாம். செப்.16 முதல் 30-ஆம் தேதி வரை உள்ளாட்சி அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை பொதுமக்களிடையே வாசித்து திருத்தங்கள் செய்யப்படும். செப்.20-ஆம் தேதி முதல் அக்.4-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் தொடர்பான புகார்களை அரசியல் கட்சிகள் அளிக்கலாம். நவ.16-ஆம் தேதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். டிச.15-ஆம் தேதிக்குள் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலை கணினியில் உள்ளீடு செய்யப்படும்.

ஜன.1-ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். ஜன.11-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.