ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பள்ளி அலுவலகத்தில் ரூ.20 லட்சம் கொள்ளை

தனியாருக்குச் சொந்தமான பள்ளி அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

Published On :

தனியாருக்குச் சொந்தமான பள்ளி அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

பெங்களூரு கல்யாண் நகரில் உள்ள தனியார் பள்ளி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

தகவலறிந்த அப்பள்ளியின் நிர்வாக அதிகாரி மோகன், ஹென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் கவிழ்ந்து பெண் சாவு

தும்கூரு, செப். 14: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூரைச் சேர்ந்த அனுமந்தராயப்பா, அவரது மனைவி கவிதா (50) ஆகியோர் இருவரும், உறவினர்கள் சிதானந்தா, ஷில்பா ஆகியோருடன் திங்கள்கிழமை அதிகாலை காரில் ஹொசதுர்காவுக்கு சென்று கொண்டிருந்தனராம். தும்கூரு மாவட்டம், கல்லம்பள்ளி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், படுகாயமடைந்த கவிதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அனுமந்தராயப்பா, சிதானந்தா, ஷில்பா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, கல்லம்பள்ளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட

8 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு காமாட்சிப்பாளையா காவல் சரகம் ஹெக்னஹள்ளி பகுதியில், சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்று போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்ட மகாலட்சுமி லேஅவுட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் (25), லக்கெரேவைச் சேர்ந்த தினேஷ் (25),சுங்கதகட்டேவைச் சேர்ந்த நடராஜ் (37), சிவநகரைச் சேர்ந்த குமார் (35), யஸ்வந்த்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (35), மூடுளுபாளையத்தைச் சேர்ந்த சோமா (43), ஹெக்னஹள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (26), சுனில் (25) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, காமாட்சிபாளையா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.