தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

போலி ஜவுளி விற்பனை: ஒருவர் கைது

முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி ஜவுளிகளை விற்பனை செய்த நபரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.25.38 லட்சம் மதிப்புள்ள போலி ஜவுளிகளை பறிமுதல் செய்தனர்.

Updated On :

முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி ஜவுளிகளை விற்பனை செய்த நபரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.25.38 லட்சம் மதிப்புள்ள போலி ஜவுளிகளை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு அனுமந்தநகர் 2-ஆவது குறுக்குதெரு, 7-ஆவது முக்கியச் சாலையில் உள்ள கட்டடம் ஒன்றில், முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் போலி ஜவுளிகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற போலீஸார், போலி ஜவுளிகளை விற்பனை செய்த பசவனகுடி கிருஷ்ணா சாலையைச் சேர்ந்த பிரமோத்குமார் (22) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.25.38 லட்சம் மதிப்பிலான போலி ஜவுளிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, அனுமந்த நகர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

வாடிக்கையாளர்களுக்குத் தேவையான

சேவைகளை வங்கிகள் வழங்க வேண்டும்

வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை வங்கிகள் வழங்க வேண்டும் என ஆக்சிஸ் வங்கியின் செயல் தலைவர் ராஜீவ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் திங்கள்கிழமை அவ் வங்கியின் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: சர்வதேச அளவில் அனைத்துத் துறைகளும் நவீனமாக மாறி வருகின்றன.

வங்கிகளிலும் விரைவான சேவையை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதற்கு ஏற்ற வகையில், வங்கிகளும் தங்களது சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றன.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் வழங்க வேண்டும். அண்மையில் ஆக்சிஸ் வங்கி சார்பில், லைம் என்ற புதிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது போல பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து வழங்கிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.