வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார் அந்த மாநில முதல்வர் சித்தராமையா.
இதுகுறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜி.பரமேஸ்வர் நீடிக்கவுள்ளார்.
கட்சிக்கு புதிதாக மற்றொரு செயல் தலைவராக எஸ்.ஆர்.பாட்டீல் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது செயல் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ் மாநிலம் முழுவதும் பயணம் செய்ய முடியாது.
எனவே, வட கர்நாடகத்தில் கட்சிப் பணியைக் கவனிக்கும் பொறுப்பு எஸ்.ஆர்.பாட்டீலிடம், தென்கர்நாடகத்தில் கட்சிப்பணியை கவனிக்கும் பொறுப்பு தினேஷ் குண்டுராவிடம் வழங்கப்பட்டுளது.
சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் அகில இந்திய கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பாவும், கட்சியின் அகில இந்திய செயலாளராக சதீஷ் ஜார்கிஹோளியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் யாருக்கும் அதிருப்தி இல்லை.
சட்டப்பேரவைத் தேர்தலை என் தலைமையில் சந்திக்கவிருப்பதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டியதே எங்களின் நோக்கமாகும்.
தேர்தலில் வென்றதும் புதிய முதல்வர் யார் என்பதை புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள். சட்டப்பேரவைத் தேர்தலை மிகுந்த பொறுப்புணர்வுடன் எதிர்கொள்வோம். டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன. ஜூன் 5-ஆ தேதி தொடங்கி 16-ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கப்படும்.
உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யும்படி ஜி.பரமேஸ்வரை நான் கேட்டுக் கொள்ளவில்லை. கட்சிப் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் ஜி.பரமேஸ்வர் ராஜிநாமா செய்கிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

