"சமூக வளர்ச்சிக்கு ஓவியங்களின் பங்களிப்பு அவசியம்'

சமூக வளர்ச்சிக்கு ஓவியங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என ஓவியர் ஸ்ரீதர் ஐயர் தெரிவித்தார்.
Updated on
1 min read

சமூக வளர்ச்சிக்கு ஓவியங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என ஓவியர் ஸ்ரீதர் ஐயர் தெரிவித்தார்.
பெங்களூரு சித்ரகலாபரிஷத்தில் புதன்கிழமை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஓவியர் ரிது குப்தாவின் ஓவியக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
சர்வதேச அளவில் சமூக மாற்றம், வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஊடகத்தின் பங்களிப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக அச்சு ஊடகங்களில் செய்திகளை போல, ஓவியங்களும் முக்கியப் பங்களிப்பை வகிக்கின்றன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஓவியர் ரிதுகுப்தாவின் ஓவியங்கள், நாள்தோறும் நாம் சந்தித்து வரும் பிரச்னைகளை எதிரொலிக்கு வகையில் உள்ளன.
ஓவியங்கள் சமூக வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தெய்வங்கள்,  சாதனையாளர்களின் ஓவியங்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளன. ஒவியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் ஓவியர் ரிது குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com