சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெங்களூரில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்: மேயர்

பெங்களூரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அனைவரும் தங்களது குடியிருப்பில் ஏற்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:54 am

DIN

பெங்களூரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அனைவரும் தங்களது குடியிருப்பில் ஏற்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு மேற்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: பெங்களூரு மேற்கு மண்டலத்தில் 44 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அனைத்து குடியிருப்புவாசிகளும் ஏற்படுத்த அதிகாரிகள் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேற்கு மண்டலத்தில் மட்டுமன்றி, பெங்களூரு முழுவதும் மழைநீர் சேகரிப்பை டிச. 5-ஆம் தேதிக்குள் ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.  மழைநீரை சேகரிக்காவிடில் கோடையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும். இதை அனைத்து அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் துணை மேயர் பத்மாவதி நரசிம்மராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.