பெங்களூரில் இன்று முதல் வேளாண் கண்காட்சி
பெங்களூரில் வியாழக்கிழமை (நவ.16) முதல் வேளாண் கண்காட்சி நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நவ.16 முதல் 19-ஆம் தேதி வரை வேளாண் கண்காட்சி நடக்கவிருக்கிறது. இந்த கண்காட்சியில் மாநில, தேசிய, பன்னாட்டுஅளவிலான அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள், நிதி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பாளர்கள், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், வேளாண் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அரசு, அரசுசார், தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
நவ.16-ஆம் தேதி காலை 11 மணி அளவில் கண்காட்சியை ஆளுநர் வஜுபாய் வாலா தொடக்கிவைக்கிறார். விழாவில் வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். விழாவில் சிறந்த உழவர் விருதுகளை அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா வழங்குகிறார்.
நவ.17-ஆம் தேதி நண்பகல் 2 மணிக்கு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் மத்திய அமைச்சர் அனந்த்குமார், அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதேபோல, நவ.18-ஆம் தேதி நடக்கும் விழாவில் உழவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, மத்திய அமைச்சர் சதானந்த கெளடா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
நவ.19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் பங்கேற்கும் முதல்வர் சித்தராமையா, கர்நாடக உழவர் விருதுகளை அளித்து கெளரவிக்கிறார். அன்று நண்பகல் 2.30 மணிக்கு கண்காட்சி நிறைவுவிழா நடக்கவிருக்கிறது.
இந்த கண்காட்சியைக் காண 12 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு கே.நாராயண கெளடாவை(உதவி விரிவாக்க இயக்குநர்)080-23620323, 23516353, 9844055236, பழனிமுத்துவை 9945254640, பி.எல்.சிதானந்தாவை 9845188846 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
