தீ விபத்து: 3 பேர் பலி
சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.


சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஸ் பிரதான் (27). இவரது மனைவி கர்னா (24). இவர்களது உறவினர் தேவன் (23), சவாண் ஆகிய 4 பேரும் வேலை நிமித்தமாக பெங்களூரு ஹெப்பகோடி திருபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நவ.10-ஆம் தேதி காலை வீட்டில் கர்னா சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீக்காயமடைந்த விகாஸ், கர்னா, தேவன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
சவாணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஹெப்பகோடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...