சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போதைப் பொருள் விற்பனை:  நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கைது

போதைப்பொருள்கள் கோகைன்,  எம்டிஎம்ஏ,  ஓபியம்,  மார்பைன் ஆகியவற்றை விற்பனை செய்த நைஜீரியாவைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:31 am

DIN

போதைப்பொருள்கள் கோகைன்,  எம்டிஎம்ஏ,  ஓபியம்,  மார்பைன் ஆகியவற்றை விற்பனை செய்த நைஜீரியாவைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் பைடிலீஸ் இஸா (37).  இவர் பெங்களூரு கே.ஆர்.நகர் சாந்திநகரில் வசித்து வந்தாராம்.  இவர் சிகேஹள்ளி மல்லப்பா லேஅவுட் 2-வது முக்கியச்சாலையில் கோகைன்,  எம்டிஎம்ஏ,  ஓபியம், மார்பைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தாராம்.  
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று பைடிலீஸ் இஸாவை கைது செய்து,  220 கிராம் கோகைன்,  75 கிராம் எம்டிஎம்ஏ,  210 கிராம் ஓபியம் ,  மார்பைன் மாத்திரைகள்,  செல்லிடப்பேசி,  இருசக்கர வாகனம், ரூ. 2,500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.  இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.  இது குறித்து கே.ஆர்.புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.