கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை

பெங்களூரு உள்பட மாநில அளவில் கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கோல்ஃப் தொழில்நுட்ப் சங்கத்தின் தலைவர் தேவங்ஷா தெரிவித்தார்.
Updated on
1 min read

பெங்களூரு உள்பட மாநில அளவில் கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கோல்ஃப் தொழில்நுட்ப் சங்கத்தின் தலைவர் தேவங்ஷா தெரிவித்தார்.
பெங்களூரில் சர்வதேச அளவில் கோல்ஃப் விளையாட்டில் சிறந்து விளங்கிய பெங்களூருவைச் சேர்ந்த சையத் சாஹிப் அகமது, காலின்ஜோஷி ஆகியோரை பாராட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
சர்வதேச் அளவில் கோல்ஃப் விளையாட்டுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் அதற்கான வரவேற்பு குறைந்த அளவே உள்ளது.
இந்த விளையாட்டை பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவைச் சேர்ந்த சையத் சாஹிப் அகமது, காலின்ஜோஷி ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோல்ஃப் விளையாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். வரும் ஏப்ரல் மாதம் 19, 20-ஆம் தேதிகளில் கோல்ஃப் விளையாட்டு கண்காட்சி ஹோட்டல் லலித் அசோக்கில் நடைபெற உள்ளது.
இதில் கோல்ஃப் விளையாட்டு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இடம் பெற்றிருக்கும். கண்காட்சியில் கோல்ஃப் விளையாட்டில் சந்தித்து வரும் பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியில் இந்திய கோல்ஃப் சங்கத்தின் தலைவர் விங் கமாண்டர் சதீஷ் அபராஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com