காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

"ரூ. 300 கோடி செலவில் 20 இடங்களில் மாசு கண்டறியும் உபகரணங்கள் அமைக்கப்படும்

பெங்களூரில் ரூ. 300 கோடி செலவில் 20 இடங்களில் மாசு கண்டறியும் உபகரணங்கள் அமைக்கப்படும் என்று மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:05 am

DIN

பெங்களூரில் ரூ. 300 கோடி செலவில் 20 இடங்களில் மாசு கண்டறியும் உபகரணங்கள் அமைக்கப்படும் என்று மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு விதானசெளதாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறைந்த போக்குவரத்து தினவிழா கலந்து கொண்டு அவர் பேசியது:
பெங்களூரில் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. வாகனங்கள் கக்கும் புகையினால் மாசு அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நகரின் பசுமையை காக்க மாசுவைக் கட்டுப்படுத்துவது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு, ரூ. 300 கோடி செலவில் மாநகரில் முக்கிய 20 இடங்களில் மாசு கண்டறியும் உபகரணங்கள் அமைக்கப்படும் என்றார்.
மேலும் வாகனங்களால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த சைக்கிள் சவாரி ஊக்குவிக்கப்படும். 200 மின்சார கார், சைக்கிள்களை வாங்கி, மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, பயணிகள் சேவைக்கு விடவும் திட்டமிட்டுள்ளோம். மாசுவைக் கட்டுப்படுத்த மாநகராட்சியுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.