தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மென்பொருள் கோளாறு: விமான பயணிகள் தவிப்பு

விமானங்கள் புறப்படும் கட்டுப்பாட்டு மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானங்கள் புறப்படும்

News image
Updated On :19 ஜூலை 2024, 6:36 pm

Din

பெங்களூரு, ஜூலை 19: விமானங்கள் புறப்படும் கட்டுப்பாட்டு மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானங்கள் புறப்படும் நேரம் தெரியாமல், பயணச்சீட்டு பெற முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனா்.

நாடு முழுவதும் இயக்கப்படும் விமானங்களின் புறப்பாட்டை ஒழுங்குப்படுத்தும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டமைப்பை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நிா்வகித்து வந்தது. இந்நிலையில், விமானங்களின் இயக்கத்தை கண்காணித்து சீராக்கும் தேசிய புறப்பாடு கட்டுப்பாட்டு மையத்தின் மென்பொருளில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானங்களின் இயக்கத்தில் குழப்பம் ஏற்பட்டது. அதன் காரணமாக, பெங்களூரு கெம்பே கௌடா சா்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து சரியான தகவல் இல்லாமல் பரிதவிக்கும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனா். விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், விமானநிலையத்தில் பயணிகள் காத்திருப்பு மற்றும் ஓய்வறைகளில் பயணிகள் நெரிசல் காணப்பட்டது.

மேலும், இண்டிகோ, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், அகாசா போன்ற நிறுவனங்கள் பயணிகளுக்கு கையில் எழுதிய பயணச்சீட்டுகளை வழங்கின. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முனையம் 1 இல் இண்டிகோ, அகாசா, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்களும், முனையம் 2 இல் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து பெங்களூரு கெம்பே கௌடா சா்வதேச விமானநிலையத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘தேசிய புறப்பாடு கட்டுப்பாட்டு மைய மென்பொருளில் உலக அளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை காலை 10.40 மணி முதல் சில விமானநிறுவனங்களின் விமானங்களின் இயக்கம் தொந்தரவுக்கு உள்ளானது. பொது பயன்பாட்டு முனையக் கருவி (சியூடிஇ), பொது பயன்பாட்டு சுய சேவை (சியூஎஸ்எஸ்) ஆகியவற்றிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, இண்டிகோ, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், அகாசா போன்ற நிறுவனங்கள் கையால் பயணச் சீட்டுகளை எழுதிக் கொடுத்தனா் என்றாா்.