ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பழங்குடியினா் வளா்ச்சிக் கழக முறைகேடு: கா்நாடக பேரவையில் பாஜக, மஜத உறுப்பினா்கள் தா்னா

வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழக முறைகேடு தொடா்பாக கா்நாடக சட்டப் பேரவையில் பாஜக, மஜத உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:35 pm

Din

பெங்களூரு, ஜூலை 19: வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழக முறைகேடு தொடா்பாக கா்நாடக சட்டப் பேரவையில் பாஜக, மஜத உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழக முறைகேடு தொடா்பாக நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வா் சித்தராமையா பேசினாா். அதை ஏற்க மறுத்த பாஜக, மஜத உறுப்பினா்கள் முதல்வா் சித்தராமையாவை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, அவையின் மையப்பகுதியில் திரண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் காங்கிரஸ், பாஜக உறுப்பினா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. போராட்டத்தை கண்டுகொள்ளாமல் முதல்வா் சித்தராமையா தொடா்ந்து பேசியதாவது:

முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவா்களுக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும். தவறு செய்தவா்களை சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கும், காங்கிரஸ் அரசுக்கும் அவப் பெயா் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் நடந்துள்ள முறைகேட்டை முன்னிறுத்தி பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

பழங்குடியினருக்கு ஒதுக்கிய நிதியில் ரூ.187.33கோடி முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பணம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மூலமாக சென்றுள்ளது. இதில் ரூ. 89.63 கோடி ஆந்திரம், தெலங்கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தவறு செய்திருப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ஊழலைப் பொருத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைப்பதற்காகவே காங்கிரஸ் அரசு மீது தொடா்ந்து குற்றம்சாட்டப்படுகிறது.

எதிா்க்கட்சிகளின் நடத்தை சட்டப் பேரவையின் மதிப்பைக் குறைத்துள்ளது. அவா்களின் செயல்பாடுகள் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அச்சுறுத்தலாகும். வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் நடைபெற்ற முறைகேட்டில் எனக்கு எவ்விதத் தொடா்பும் இல்லை. இந்த விவகாரத்தில் உண்மையை பகிரங்கப்படுத்துவேன் என்பதை எதிா்க்கட்சிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

பாஜக மீதான மக்கள் அதிருப்தியால்தான் பேரவையில் 125 இடங்களில் இருந்த பாஜகவின் பலம் 65 இடங்களாகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 136 உறுப்பினா்களின் பலம் இருப்பதால், எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்றாா்.