கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெங்களூரில் இன்று இலவச சித்த மருத்துவ முகாம்

News image
Updated On :5 ஜூன் 2024, 10:40 pm

Din

பெங்களூரில் வியாழக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெங்களூரு சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சித்த ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் கீழ் பெங்களூரில் இயங்கும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் எட்டாம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, சிவாஜி நகா், குயின்ஸ் சாலையில் தினச்சுடா் அலுவலகத்தின் அருகேயுள்ள கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 6) காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையுடன் இலவசமாக மருந்தும் வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழரின் மருத்துவ முறையாம் சித்த மருத்துவத்தின் பலனை பெறுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.