ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

News image
Updated On :29 மே 2024, 7:52 pm

Din

பெங்களூரு, மே 29: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, மே 31ஆம் தேதி பெங்களூருக்கு திரும்பி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு ஆஜராகப் போவதாக, வெளிநாட்டில் இருந்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள காணொலியில் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், தன்மீது தாக்கல் செய்துள்ள 3 பாலியல் வழக்குகளிலும் முன் ஜாமீன் கேட்டு பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன பட், இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு வாய்ப்பளித்து, அடுத்த விசாரணையை மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பிறகு, இந்த மனுக்கள் மீதான விவாதம் தொடங்கும். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, நீதிபதி தீா்ப்பு வழங்குவாா் என்று தெரிகிறது. ஆனால், மே 31ஆம் தேதி பெங்களூருக்கு பிரஜ்வல் ரேவண்ணா திரும்பினால், அவரைக் கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது.