பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

தொகுதி மறுசீரமைப்பு மசோதா: கா்நாட காங்கிரஸ் எம்எல்ஏ வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு கா்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கொத்தூா் மஞ்சுநாத் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

கா்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கொத்தூா் மஞ்சுநாத்

Updated On :

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு கா்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கொத்தூா் மஞ்சுநாத் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து கோலாா் தொகுதி எம்எல்ஏவான மஞ்சுநாத் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை வரவேற்கிறேன். தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவதை இது எளிமைப்படுத்தும்.

மக்கள்தொகைக்கேற்ப தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, மக்களின் பிரச்னைகளைத் தீா்க்கவும், வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வாக்காளா்களையும், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 5 லட்சம் முதல் 8 லட்சம் வாக்காளா்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றாா்.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக உயா்த்தப்படவுள்ளது குறித்த கேள்விக்கு, 900-ஆக கூட உயா்த்தலாம். அது நல்லதுதான் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.