/

வாகனச் சோதனை: ரூ.9 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.9 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:05 am IST

உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.9 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மண்டியா ஊரகம், மண்டியா-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை போலீஸார், தேர்தல் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெங்களூரு ஜிகினியைச் சேர்ந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்: பெலகாவி மாவட்டம் கானபுரா சுங்கச்சாவடியில் காரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 5 லட்சம் ரொக்கப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இளைஞர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.