சிக்கனஹள்ளியில் ஏரியில் மூழ்கி புதுமணத் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ராம்நகர் மாவட்டத்துக்குள்பட்ட சென்னப்பட்டனா அருகேயுள்ள ஹனுமந்த நகரைச் சேர்ந்த சேகர் (32), சுமா (26) ஆகிய இருவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
இருவரும் ராம்நகர் சின்னஹள்ளியில் உள்ள ராஜுவின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர். அங்குள்ள ஏரியில் குளிக்க ராஜுவின் குழந்தைகள் தனுஷ் (10), ஹம்சா (8) ஆகியோருடன் தம்பதியினர் சென்றுள்ளனர்.
ஏரியில் குளித்த ராஜு, தனுஷ், ஹம்சா ஆகியோர் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது, நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை மீட்கச் சென்ற சுமாவும் நீரில் மூழ்கினார்.
நீண்ட நேரமாகியும் ஏரிக்கு குளிக்கச் சென்ற 4 பேரும் வீட்டுக்குத் திரும்பாததால், ராஜுவின் மனைவி சகுந்தலா ஏரிக்குச் சென்று பார்த்தப்போது, 4 பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளது தெரியவந்தது. தகவலின்பேரில் ராம்நகர் ஊரகப் போலீஸார், அங்கு சென்று 4 பேரின் சடலங்களை மீட்டு பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

