வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

12-இல் முழு அடைப்பு: கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதைக் கண்டித்து,  ஏப்ரல் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு

Updated On :9 ஏப்ரல் 2018, 2:25 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதைக் கண்டித்து,  ஏப்ரல் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், திரைப்படத்துறையினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தப் போராட்டங்களைக் கண்டித்து ஏப்ரல் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். 
அன்றைய தினம் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு  கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முழு ஆதரவு அளிக்கும். கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் மேக்கேதாட்டு,  மகதாயி திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.