காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

"விளம்பரப் பதாகைகள் இல்லாத பெங்களூரை உருவாக்குவோம்'

விளம்பரப் பதாகைகள் (பேனர்கள்)  இல்லாத பெங்களூரை  உருவாக்குவோம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:10 am IST

விளம்பரப் பதாகைகள் (பேனர்கள்)  இல்லாத பெங்களூரை  உருவாக்குவோம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
விளம்பரப் பதாகைகளால் பெங்களூரின் அழகு குலைந்து வருகிறது.  எனவே,  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில் கொண்டு பெங்களூரில்  விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை நீக்க முடிவு செய்துள்ளோம்.  இதற்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்தோரும் ஆதரவு தர வேண்டும். 
இனி வரும் நாள்களில் விளம்பரப் பதாகைகள் இல்லாத பெங்களூரை உருவாக்கி,  அது இழந்த அழகை மீட்க வேண்டும்.  அழகுக்கும், பசுமைக்கும் சிறந்து விளங்கிய பெங்களூரு மாநகரானது அண்மைக் காலமாக குப்பைக்கும்,  விளம்பரப் பதாகைகளுக்கும் பெயர் பெற்றுள்ளது.  எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தீவிரமாக கடைப்பிடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதனால் மாநகரில் எங்கெல்லாம் சட்டவிதிகளை மீறி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அவற்றையெல்லாம் அதிகாரிகள் உடனடியாக நீக்க வேண்டும்.  அதில் ஆளும்கட்சி,  எதிர்க்கட்சி என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவற்றை அகற்றுவதில்  மாநகராட்சி அதிகாரிகள்,  ஊழியர்கள் அலட்சியம் காட்டினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.   இதற்கான பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.