நாட்டில் அடிப்படை கொள்கைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை தேசிய கொடியை ஏற்றிவைத்து அவர் பேசியது:
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஒருசில மதவாத அமைப்பினர் நாட்டை பிளவுபடுத்த சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்ற கட்சி, அமைப்புகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தி, மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமர்த்த
வேண்டியுள்ளது.
அண்மைக் காலமாக நாட்டில் அடிப்படை கொள்கை, சித்தாந்தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி மக்களின் பிரதமராகப் பணியாற்ற வேண்டும். ஆனால், அவர் தனது பொறுப்பை மறந்து ஒரு சில தொழிலதிபர்கள், செல்வந்தர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறார்.
நாட்டில் பெண்கள், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அடக்குமுறையால் மக்களிடம் அனைத்தையும் பறிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மக்களவை உறுப்பினர் வீரப்ப மொய்லி, மேயர் சம்பத்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!

பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்!

ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!

வார பலன்கள் (ஆக. 7 - 13) - ரிஷபம்
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


