தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தந்தம், சிறுத்தை தோல் விற்பனை: 6 பேர் கைது

இரு வேறு இடங்களில் யானை தந்தம், சிறுத்தைத் தோல் ஆகியவற்றை விற்பனை செய்ய முயன்றதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:05 am IST

இரு வேறு இடங்களில் யானை தந்தம், சிறுத்தைத் தோல் ஆகியவற்றை விற்பனை செய்ய முயன்றதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஹாசன் மாவட்டத்துக்குள்பட்ட  சக்லேஷ்புராவைச் சேர்ந்தவர்கள் நாகேஷ் (48), கிருஷ்ணராஜ் (54), ஹொளேநரசிப்புராவைச் சேர்ந்தவர் பிரதாப் (27).  மூவரும் பெங்களூரில் அண்மையில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றனராம். தகவல் அறிந்த கொடிகேஹள்ளி போலீஸார் 3 பேரையும் கைது செய்து,  15 கிலோ எடையுள்ள 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்:  தேவிநகர் வெளிவட்டச்சாலை அருகே சிறுத்தை தோலை விற்பனை சிலர் முயற்சிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற கொடிகேஹள்ளி போலீஸார், சிறுத்தை தோலை விற்பனை செய்ய முயன்றதாக,  பெல்லாரி மாவட்டம் அப்பனஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ் (30), பாபண்ணா (27), பசவராஜ் (48) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு சிறுத்தைத் தோல், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.