தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை பதவிவகித்த நிலையில், அவருக்கு பதிலாக தற்போது மாணிக்கம் தாகூரை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான மாணிக்கம் தாகூர், மக்களவை கொறடாவாகவும் உள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்ட மாணிக்கம் தாகூர், கூட்டணி கட்சியான திமுக மீது தொடர் விமர்சனங்களை வைத்து வந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தவெக கூட்டணியில் இணைந்து ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற பேச்சு எழுந்த நிலையில் மாணிக்கம் தாகூரை தலைவராக நியமிக்க பெரும்பாலானோர் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார்.
மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வாழ்த்துப் பதிவில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
CM Vijay congratulated Manickam Tagore on his appointment as the President of the Tamil Nadu Congress Committee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!
தேர்தல் தோல்வி! சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸ் மீது தாக்குதல் ஏன்? மாணிக்கம் தாகூர்






