தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
கர்நாடகத்தில் ம.ஜ.த.- காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளியின் பதவியை பறித்து, அவரது இளைய சகோதரர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரமேஷ்ஜார்கிஹோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதாக வதந்தி பரவியுள்ளது.
இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
அமைச்சராக இருந்தேன். எந்தக் காரணத்தையும் கூறாமல் திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். கதாநாயகனாக இருந்தவரை, வில்லனாக காங்கிரஸ் மேலிடம் உருவாக்கியுள்ளது. வில்லனாக இருந்தவர்களை கதாநாயகனாக ஆகியுள்ளனர். இதற்காக அச்சப்படமாட்டேன். காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் தொடர்பில் உள்ளனர். அவர்கள் யார் என்பதை தற்போது கூற மாட்டேன்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வது குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்றார்.
இந்த நிலையில், ரமேஷ் ஜார்கிஹோளியை அதானி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேஷ் குமடவள்ளி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த திட்டம்: மாநிலங்கள் ஆலோசனைகளை வழங்க அமித் ஷா வேண்டுகோள்

ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாட்டில் எங்களுக்கு முழு உரிமை

ஆபரேஷன் கவச்: 48 மணி நேரத்தில் 255 போதைப் பொருள் கடத்தல்காரா்கள் கைது





