பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :23 ஜூலை 2018, 9:21 am IST

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக விஸ்வேஷ்வரா பொறியியல் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர்களாகப் பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகின்றனர்.
2018-19-ஆம் கல்வியாண்டில் பி.இ. (கணினி அறிவியல், தகவல் அறிவியல்), எம்.இ. (கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி நெட்வொர்க்) போன்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் தகுதிப் படைத்தவர்களிடமிருந்து இப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.இ., எம்.டெக், பி.எச்டி போன்ற முதுகலை பட்டப்படிப்பு படித்தோர், தொழில் மற்றும் ஆசிரியப் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இதே கல்லூரியில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் பயிற்றுவிக்க எம்.ஏ. (கன்னடம், ஆங்கிலம்) படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப் பணியில் சேர ஆர்வமுள்ளோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தலைவர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல்  துறை, பல்கலைக்கழக விஸ்வேஷ்வரா பொறியியல் கல்லூரி, கே.ஆர். சதுக்கம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 080-22961358 என்ற தொலைபேசியைத் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.