/

சட்டப்பேரவைத் தேர்தல்: ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு

ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜூன் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி அத்தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On :7 ஜூன் 2018, 9:31 am IST

ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜூன் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி அத்தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, அத்தொகுதியில் ஜூன் 9-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 12-ஆம் மாலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது மையங்களைச் சுற்றி 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.