சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி, வரும் 31-ஆம் தேதி ஓய்வு பெறும் கர்நாடக தலைமைச் செயலரின் பணிக் காலத்தை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடகம் கடிதம் அனுப்பியுள்ளது.
கர்நாடக கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ரத்னபிரபா, கடந்தாண்டு நவம்பர் மாதம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1981-இல் பணியில் சேர்ந்த இவர் வரும் மார்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுவதால் ரத்னபிரபாவின் பணிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
எனினும், கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத்தின் பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு கேட்டு அப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு ஏற்று கொண்டது. அதேபோல, ரத்னபிரபாவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

