பண மதிப்பிழப்பு, பொருள் சேவை வரியால் மக்கள் பயனடைவார்கள் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
சிவமொக்காவில் செவ்வாய்க்கிழமை ஹரிபிரகாஷ் கேனேமனேயின் "மணி, மோடி அண்ட் தி மேஜிக்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசியது:
பண மதிப்பிழப்பு, பொருள் மற்றும் சேவை வரியால் மக்கள் சில நாள்கள் பிரச்னையை எதிர்கொண்டிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இதன்மூலம் மக்கள் பயனடைவார்கள். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். பிரதமர் மோடி தொலைநோக்குத் திட்டத்துடன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை,பொருள் மற்றும் சேவை வரியை புகுத்தியுள்ளார். இதனை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியை மணி, மோடி அண்ட் தி மேஜிக் புத்தகம் செய்யும். மோடியின் நலத் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியை ஹரிபிரகாஷ் கேனேமனே செய்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்றார்.
நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, எழுத்தாளர் ஹரிபிரகாஷ் கேனேமனே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏப்.4-இல் கோலாரில்
ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
கோலார்,மார்ச் 28: கோலார், சிக்பளாப்பூரில் ஏப்.4-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தி, தற்போது பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து தனது சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
சுற்றுப்பயணம்
ஐந்தாம் கட்டமாக ஏப்.3,4 ஆகிய தேதிகளில் சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுர்கா, கோலார், சிக்பளாப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே பிரசாரம் செய்கிறார்.
ஏப்.3-ஆம் தேதி தாவணகெரே, சித்ரதுர்கா, சிவமொக்காவில் பிரசாரம் செய்யும் ராகுல் காந்தி, ஏப்.4-ஆம் தேதி கோலார், சிக்பளாபூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். ஏப்.4-ஆம் தேதி முல்பாகலில் பிரசாரத்தைத் தொடங்கும் ராகுல் காந்தி, கியாசம்பள்ளி, பேத்தமங்களா, பங்கார்பேட், மாலூர், நரசாபுரா, வேம்கல், சிட்லகட்டா, சிக்பளாப்பூர் நகரங்களுக்கு பேருந்து மூலம் பயணித்து மக்களைச் சந்திக்கிறார். இந்த பயணைத்தின் போது கூடலமனே விநாயகர் கோயிலுக்கு சென்று ராகுல் காந்தி சிறப்பு பூஜை செய்யவிருக்கிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூரு வழியே தில்லி திரும்புகிறார்.
ஏப்.3-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சிவமொக்காவுக்கு வரும் ராகுல் காந்தியுடன், முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரும் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
சிவமொக்காவில் தொடங்கும் பேருந்து பிரசாரப் பயணம் ஹொன்னாளி வழியாக தாவணகெரேவைச் சென்றடைகிறது. அங்கிருந்து ராகுல் காந்தி தில்லி புறப்பட்டு செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

