ஓவியக்கலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக லலிதகலா அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஓவியக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் ஓவியக் கலைக் கல்வியில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு கர்நாடக லலிதகலா அகாதெமி ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஓவியக்கலை தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கும் பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கர்நாடகத்தின் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள ஓவியக் கல்விக் கல்லூரிகள், அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள குருகுலமுறையில் செயல்படும் ஓவியக்கலை மையங்களில் ஓவியக்கலை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர் கர்நாடகத்தைச் சேர்ந்தவராகவும், 20 முதல் 25 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகையை பெறவிரும்பும் மாணவர்கள் இரண்டு கடவுச்சீட்டு புகைப்படம், ஓவியத்தின் இரண்டு நகல்கள், மதிப்பெண் பட்டியல், கல்வி நிறுவனத்தின் உறுதிக் கடிதம் ஆகியவற்றுடன் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவாளர், கர்நாடக லலிதகலா அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 080-22480297 என்ற தொலைபேசி அல்லது www.lalitkalakarnataka.org என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









