கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து, பெங்களூரில் காங்கிரஸ் தலைவர்கள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகின்றனர்.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசில் காலியாக உள்ள 7 அமைச்சர் பதவிகளை நிரப்ப கடந்த 2 மாதங்களாக தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும், ஏதாவது காரணத்தால் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கமானது அக்டோபர் 10 அல்லது 12-இல் கண்டிப்பாக நடத்தப்படும் என்று முதல்வர் குமாரசாமி அண்மையில் அறிவித்திருந்தார். இதே கருத்தை முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்திருந்தார். இதனால் நம்பிக்கை அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவியை அடைய கனவு காணத் தொடங்கினர்.
இதுதொடர்பாக ராமலிங்க ரெட்டி, எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், பி.சி.பாட்டீல், சதீஷ்ஜார்கிஹோளி, எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், எம்.கிருஷ்ணப்பா, சங்கமேஸ்வர், ரஹீம்கான், எஸ்.டி.சோமசேகர், பீமாநாயக், பைரதிபசவராஜ், அகண்ட சீனிவாஸ்மூர்த்தி, ரகுமூர்த்தி உள்ளிட்டோர் அமைச்சர் பதவியை பெற போராடி வருகின்றனர். இவர்களில் ராமலிங்கரெட்டி, எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், பி.சி.பாட்டீல், சதீஷ்ஜார்கிஹோளி, சங்கமேஸ்வர் ஆகிய 6 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்தச் சூழ்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் மீண்டும் தள்ளிவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிப்பால் ஒத்திவைப்பு?
இந்த நிலையில், கர்நாடகத்தில் காலியாக உள்ள 3 மக்களவை, 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்தால், அதில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கட்சிக்கு எதிராகத் திரும்புவார்கள் என்று காங்கிரஸில் ஒருதரப்பினர் கருதுகிறார்கள். இடைத்தேர்தலுக்கும் அமைச்சரவை விரிவாக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதால், உடனே அமைச்சரவையை விரிவாக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
புதுதில்லியில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடாவை அண்மையில் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசியதாகவும், தற்போதைக்கு விரிவாக்கம் செய்யவேண்டாம் என்று பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேவெ கௌடாவின் விளக்கம்: இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கத்தை ஒத்திவைக்குமாறு கூறவில்லை என்றும் உடனடியாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் 96 வாரியங்கள், கழகங்களுக்கும் தலைவர்களையும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர்களாக 12 பேரை நியமிக்க வேண்டும் என்றும் கூறியதாக பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை தேவெகெளடா விளக்கமளித்துள்ளார். இந்ததச் சூழலில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் குழப்பம்
நீடித்துவருகிறது.
இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசனை: இந்தநிலையில், பெங்களூருக்கு திங்கள்கிழமை வருகைதரும் கே.சி.வேணுகோபால், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத்தலைவர் தினேஷ்குண்டுராவ், துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் 3 மக்களவை, 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும் அலசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சராக ஆசையை வெளிப்படுத்திய எம்எல்ஏ
இந்தச் சூழ்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போடப்பட்டுவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எம்ஏ பி.சி.பாட்டீல், தான் அமைச்சராகும் ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஜனநாயகத்துக்கு எதிரானது. விரைவாக அமைச்சரவையை விரிவாக்க வேண்டும். லிங்காயத்து சமுதாயத்தவரான எனக்கும் அமைச்சர் பதவிவழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பல காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்!
கண்டனத்தை ஈர்க்கும் பிரதமர் மோடியின் பேச்சு!

பிரதமர் விடுத்த வேண்டுகோள் எதிரொலி: எண்ணெய் விலை உயர்வு, சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
