வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

துப்பாக்கியால் சுட்டதில்  விவசாயி காயம்

நிலத் தகராறில் இருவருக்கு ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால்  சுட்டத்தில் விவசாயி காயமடைந்தார்.

Updated On :22 அக்டோபர் 2018, 4:05 am

நிலத் தகராறில் இருவருக்கு ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால்  சுட்டத்தில் விவசாயி காயமடைந்தார்.
பெங்களூரு ஊரகப் பகுதியான ஆனேக்கல் வட்டம் லிங்கசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு.  இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சாதப்பாவுக்கும் இடையே நீண்ட நாள்களாக, நிலத் தகராறு இருந்து வந்ததாம். 
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராமு தனது நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சாதப்பா தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ராமுவை நோக்கிச் சுட்டாராம். இதில் ராமுவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சாதப்பா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காயமடைந்த ராமு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து ஜிகினி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.