கிருஷ்ண ஜயந்தியையொட்டி ராஜாஜிநகர் இஸ்கான் கோயில் அருகே திங்கள்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு ராஜாஜிநகர் இஸ்கான் கோயிலில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய நாள்களில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திங்கள்கிழமை காலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
தும்கூரு சாலையிலிருந்து வெஸ்ட் ஆப் கார்டு சாலை வழியாக மாநகருக்குள் நுழையும் அரசுப் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பரப்பனபாளையத்திலிருந்து யஸ்வந்தபுரம், பி.எச்.இ.எல், மாரியம்மா சதுக்கம் வழியாக மாநகருக்குள் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இஸ்கான் கோயிலுக்கு வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள் விஐபி பாஸ் வைத்துள்ளவர்கள் கோயில் அமைந்துள்ள மலையிலும், மற்றவர்கள் சோப் பேக்டரி, வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் உள்ள அஷ்டலக்ஷ்மி கோயில் அருகிலும், மெட்ரோ ரயில் நிலையம் அருகிலும் நிறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

”கரூர் சம்பவம்; தவெகவினர் ஓடிவிட்டனர்” செந்தில் பாலாஜி விமர்சனம் | DMK | TVK

த்ரிஷ்யம் 3 டீசர்!
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

