வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

"நாட்டு நலனைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்'

நாட்டு நலனைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும் என்று சிறுநீரக மருத்துவர் கோவர்தன் ரெட்டி தெரிவித்தார். 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

நாட்டு நலனைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும் என்று சிறுநீரக மருத்துவர் கோவர்தன் ரெட்டி தெரிவித்தார். 
கோலார் தங்கவயலில் செவ்வாய்க்கிழமை நடந்த ஸ்ரீசுமதி ஜெயின் உயர்நிலைப்பள்ளியின் 1992-93-ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்ட பள்ளியின் வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:  இந்தப் பள்ளியில் படித்த நான் இன்றைக்கு மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன்.  பள்ளியில் படிக்கும்போது, நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர்.  இன்றைக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, வழக்குரைஞர்களாக,  வணிகர்களாக, அதிகாரிகளாக,  அரசியல்வாதிகளாக  பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.  நாம் எந்த தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், அந்தந்த தொழிலில்  சிறப்பாகச் செயல்படுவதோடு,  நாட்டுக்கும் சேவையாற்றுவது போலாகும்.  நாட்டு நலனைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.  அந்த கடமையில் இருந்து வழுவக் கூடாது என்பதை முன்னாள், இன்னாள் மாணவர்கள் மறக்கக்கூடாது.  பள்ளியில் படித்த மாணவர்களை பெரியவர்களான பிறகு சந்திப்பதே மகிழ்ச்சியான தருணமாகும் என்றார் அவர்.
முன்னாள் மாணவர் வழக்குரைஞர் பாஸ்கர் பேசியது:  இந்தப் பள்ளியில் பயின்ற பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.  அந்த பழைய நண்பர்களை ஒன்றுதிரட்டி சந்திப்பது உள்ளபடியே மகிழ்ச்சியான அனுபவமாகும் என்றார் அவர்.  நோய்வாய்ப்பட்டிருந்த பள்ளி மாணவருக்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி அளித்தனர். 
விழாவில், பள்ளிச் செயலாளர் சோஹன்லால்,  முதல்வர் நாகேஷ்,  முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சுனில்,  பாபு, சத்யா,  வினோத்,  நந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.