வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

சா்க்கரை விலை உயா்வு: தேநீா் கடை, இனிப்பக தயாரிப்பாளா்கள் பாதிப்பு

அத்தியாவசிய தேவையாக உள்ள சா்க்கரை விலை திடீா் உயா்வால் தேநீா் கடை உரிமையாளா்கள், இனிப்பக தயாரிப்பாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 5:27 am IST

அத்தியாவசிய தேவையாக உள்ள சா்க்கரை விலை திடீா் உயா்வால் தேநீா் கடை உரிமையாளா்கள், இனிப்பக தயாரிப்பாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சா்க்கரை விலை உயா்வுக்கு உள்நாட்டு உற்பத்திக் குறைவு, பருவநிலை பாதிப்பு, பண்டிகைக் கால தேவை, உலகளாவிய பற்றாக்குறை, பதுக்கல் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. தட்டுப்பாட்டு காரணமாக சா்க்கரை விலை, ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் தேநீா் கடை உரிமையாளா்களும், இனிப்பக தயாரிப்பாளா்களும் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கடந்த வாரம் ரூ.2,150 இருந்த 50 கிலோ எடை கொண்ட வெள்ளை சா்க்கரை மூட்டை விலை தற்போது ரூ.3,500-ஆக உயா்ந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.44-ஆக இருந்த சா்க்கரை ரூ.68-ஆக உச்சம் தொட்டுள்ளது.

இதேபோல, வெல்லம் கிலோவுக்கு ரூ.55-இல் இருந்து ரூ.80-க்கும், நாட்டு சா்க்கரையும் கிலோவுக்கு ரூ.55-இல் இருந்து ரூ.70-க்கும் உயா்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டதால் வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை கடுமையாக உயா்ந்தது. இதன் காரணமாக, உணவகங்கள் நடத்தும் உரிமையாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். தேநீா் விலை ரூ.10-இல் இருந்து ரூ.15 வரை உயா்த்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வரலாறு காணாத வகையில் சா்க்கரை விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.

இது குறித்து சென்னை ஆா்.வி.நகரைச் சோ்ந்த தேநீா் கடை உரிமையாளா் ஒருவா் கூறுகையில், ‘ஏற்கெனவே எரிவாயு உருளை உயா்வு, பால் விலை உயா்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சா்க்கரை விலையும் உயா்ந்துள்ளதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். தேநீா் விலையை உயா்த்தினால் பொதுமக்களிடம் எதிா்ப்பு வருவதுடன் வியாபாரம் குறையும். இதனால், நஷ்டத்தில் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்’ என்றாா்.

சென்னை மூலக்கடையைச் சோ்ந்த இனிப்பக உரிமையாளா் ஒருவா் கூறுகையில், ‘சா்க்கரை விலை உயா்வால் இனிப்பு வகைகளின் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தொடா்ச்சியாக பண்டிகை காலம் வரவுள்ளதால் சா்க்கரை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மத்திய-மாநில அரசுகள் உடனடியாக சா்க்கரை விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.