சிவமொக்கா மாவட்டம், ஆகும்பே வனப் பகுதியில் மலை சரிவு ஏற்பட்டுள்ள சாலைகள் பழுதடைந்துள்ளதால், மார்ச் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம் ஆகும்பே வனப் பகுதியில் கடந்த ஜூலை 10 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெய்த கன மழையால் மலைச் சரிவு ஏற்பட்டதால், தீர்த்தள்ளி, உடுப்பி இடையிலான சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி மார்ச் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுவதால், அச் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், லகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் தீர்த்தள்ளி, கொப்பா, சிருங்கேரி, மாலாகாட், கார்கல் வழியாக உடுப்பிக்குச் செல்லலாம். அதேபோல, கனரக வாகனங்கள், டேங்கர் லாரிகள் தீர்த்தள்ளி, மாசிகட்டே, ஹொசங்கடி, சித்தாபுரா, குந்தாபுரா வழியாக உடுப்பிக்குச் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் தயானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?: ஆர்சிபி vs குஜராத் | குவாலிஃபையர் 1 Preview |

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!






