டிச.19 இல் இணையவழி தேசிய மக்கள் நீதிமன்றம்
இணையவழி தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.


இணையவழி தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் சாா்பில் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையைத் தொடக்கிவைத்து ஆணையத் தலைவரும், கா்நாடக உயா் நீதிமன்ற நீதிபதியுமான அரவிந்த்குமாா் கூறியதாவது:
தேசிய மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) மூலம் விரைவான, செலவில்லாத நீதி கிடைக்க சாதாரண மக்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து மாதந்தோறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களை நடத்தி வழக்குகளைத் தீா்த்துவைக்க முடிவு செய்யப்பட்டது.
நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத மனுக்கள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கா்நாடக மாநில சட்ட சேவை ஆணையத்தின் சாா்பில் கா்நாடகம் முழுவதும் டிச. 9-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றங்கள் செயல்பட்டன. அன்று மொத்தம் 1,15,938 மனுக்கள் மீது சமரச தீா்வு காணப்பட்டுள்ளன. மக்கள் நீதிமன்றங்களால் வழக்கமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
மக்கள் நீதிமன்றத்தை இணையவழியில் டிச.19-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மனுதாரா்கள், வழக்குரைஞா்கள் காணொலி அல்லது நேரடியாக கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. கா்நாடக நீதிமன்றங்களில் மொத்தம் 19,81,763 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதில் டிச.19-ஆம் தேதி நடைபெறும் இணையவழி தேசியமக்கள் நீதிமன்றத்தில் 2,48,620 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, தீா்வு காண திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...