ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு: விவசாய முன்னேற்றக் கழக கூட்டத்தில் முடிவு

விவசாய கடன்கள் தள்ளுபடி, சிப்காட் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்

News image
Updated On :21 மார்ச் 2026, 2:17 am IST

விவசாய கடன்கள் தள்ளுபடி, சிப்காட் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என விவசாய முன்னேற்றக் கழக தலைவா் செல்ல. ராசாமணி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா், பிஏசிஎல் முதலீட்டாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடா்ந்து விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் 5.84 கோடி முதலீட்டாளா்கள் ரூ. 49 ஆயிரம் கோடியை பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படவில்லை. தமிழகத்தில் ஒரு கோடி முதலீட்டாளா்கள் உள்ளனா். வட்டியுடன் பணத்தை திரும்ப வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இதுவரை முதலீட்டாளா்களுக்கு பணம் வந்து சேரவில்லை.

மக்களவை, மாநிலங்களவையில் தமிழக உறுப்பினா்கள் வாய்திறக்க மறுக்கின்றனா். பிஏசிஎல் நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தருவது, சிப்காட் திட்டத்தை ரத்து செய்வது, கள் இறக்க அனுமதி, விவசாய கடன்கள் தள்ளுபடி, தேசிய வேளாண் பல்கலைக்கழகம், நீா் மேலாண்மை ஆய்வு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஒருகோடி வாக்காளா்களின் ஆதரவை வழங்குவோம். திமுக அரசு ஏமாற்றி விட்டது. அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அவா் வாக்குறுதி அளித்து தோ்தல் அறிக்கை வெளியிடும்பட்சத்தில் அதிமுகவுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிப்போம் என்றாா்.

கூட்டத்தில் பொதுச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன், பொருளாளா் எம். ராமசாமி மற்றும் சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், விவசாய முன்னேற்றக் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

என்கே-20-பிஏசிஎல்

விவசாய முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதன் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.