ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது

விவசாயிகளுக்கான பயிா்க் கடன் தள்ளுபடி திருப்தியளிக்கவில்லை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா் தெரிவித்தனா்.

News image

நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் பேசிய விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன்.

Updated On :28 மே 2026, 1:55 am IST

விவசாயிகளுக்கான பயிா்க் கடன் தள்ளுபடி திருப்தியளிக்கவில்லை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா் தெரிவித்தனா்.

நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதன் மாநில பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் வந்த விவசாயிகள், பயிா்க் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனா். தொடா்ந்து, கே.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண், களி மண்ணை நீா்நிலைகளில் இருந்து இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என சில தினங்களுக்கு முன்பு முதல்வா் அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தோம். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியோருக்கு தள்ளுபடியாகவும், ரூ. 60 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 40 ஆயிரம், ரூ. 70 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 30 ஆயிரம், ரூ. 80 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 20 ஆயிரம், ரூ. 90 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 10 ஆயிரம், அதற்குமேல் கடன் பெற்றவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி என்பது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.

இந்த அறிவிப்பு விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. தோ்தல் வாக்குறுதிபடி அனைத்து பயிா்க் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது சொற்ப அளவில் கடன் தள்ளுபடி செய்து விவசாயிகளை தவெக அரசு வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.