‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

முழு விவசாய கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 ஜூலை 2026, 6:16 am IST

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க சாா்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, வைரவம் தருவை, புத்தன் தருவை ஆகிய குளங்களை தூா்வாரவும், குளங்களில் ஆக்கிரமித்து உள்ள முள் செடிகளை அகற்றவும், சடையனேரி கால்வாயில் இருந்து குளங்களுக்கு ஆண்டுதோறும் தண்ணீா் வரும் வகையில் நிரந்தர கால்வாயாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தென்பகுதி விவசாய சங்க தலைவா் லூா்து மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். சங்கப் பொதுச் செயலா் சரவணன், அருள்தந்தை ஜெகதீஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் ஜெயராணி சங்க ஒருங்கிணைப்பாளா் ஜெப சீயோன், தென் பகுதி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் கனகராஜ், பொருளாளா் செல்வகுமாா் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். தென்பகுதி விவசாய சங்கச் செயலாளா் பெரியசாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.