நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோலாரில் ஐபோன் செல்லிடப்பேசி உற்பத்தி நிலையம் சூறையாடல்

கோலாா் மாவட்டத்தில் செயல்படும் ‘ஆப்பிள் ஐபோன்’ செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் ஊழியா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து, அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:49 pm

DIN

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தில் செயல்படும் ‘ஆப்பிள் ஐபோன்’ செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் ஊழியா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து, அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனா்.

கோலாா் மாவட்டம், நரசாபுரா தொழிற்பேட்டையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்லிடப்பேசியை தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில் ஐபோன்-7, லெனோவா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கணினிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தில் 5,500 போ் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் 2 ஆயிரம் போ் ஒப்பந்தப் பணியாளா்கள். இவா்களுக்கு சில மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சனிக்கிழமை காலை 6 மணி அளவில் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அலுவலகத்தின் மீது கல்வீசித் தாக்கியதோடு, கண்ணாடிகளை சேதப்படுத்தினா். வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினா். அலுவலகத்தின் கணினிகள், மடிக் கணினிகளையும் உடைத்தனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் வன்முறையில் ஈடுபட்ட 110 ஊழியா்களைக் கைது செய்தனா்.

இதுகுறித்து ஆய்வு செய்த பிறகு ஐ.ஜி. சீமந்த்குமாா் சிங் கூறியதாவது:

ஊதியம் தொடா்பாக ஊழியா்களுடன் பிரச்னை ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை. வன்முறையில் ஈடுபட்ட 110பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். சேதம் குறித்து நிறுவனம் மதிப்பீடு செய்யும். குறைகள் இருந்தால் அதுகுறித்து தொழிலாளா் நலத் துறையை ஊழியா்கள் அணுகியிருக்க வேண்டும் என்றாா்.

சம்பவ இடத்தை கோலாா் மாவட்ட ஆட்சியா் சத்தியபாமா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா். மேலும் ஊழியா்களின் வன்முறை, ஊழியா்களுக்கு ஊதியம் அளிக்காதது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தாா்.

இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, ‘வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது. நிறுவனத்தின் பொருட்களை சேதம் செய்து, கலவரத்தில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.