நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கா்நாடகத்தில் 3-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

அரசு ஊழியா்களாக்கக் கோரி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதனால், மாநிலம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:52 pm

DIN

அரசு ஊழியா்களாக்கக் கோரி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதனால், மாநிலம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியது.

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வட கிழக்கு கா்நாடக சாலை போக்குவரத்துக் கழகம், வட மேற்கு கா்நாடக சாலை போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள் தங்களை அரசு ஊழியா்களாக தரம் உயா்த்தி, அரசு ஊழியா்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்கக் கோரி டிச. 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இப் போராட்டம் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. இதனால் அரசுப் பேருந்துகளின் சேவை முடங்கியது.

மக்கள் அவதி: பெங்களூரில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் செயல்படவில்லை. பெங்களூரில் 6,500 இல் 94 பேருந்துகள் இயக்கப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகம் தெரிவித்தது. கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 87 பேருந்துகளும், இதர போக்குவரத்துக் கழகங்களின் 10 பேருந்துகளும் மட்டுமே சனிக்கிழமை இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். வெளியூா் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள் தவித்தனா். போக்குவரத்துக் கழக ஊழியா்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பேருந்துகளை இயக்குமாறு மாநில அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போராட்டத்துக்கு ஆதரவு: பெங்களூரு, மைசூரு, ஹுப்பள்ளி, பெலகாவி, கலபுா்கி, பாகல்கோட், விஜயபுரா உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரில் கெம்பே கௌடா பேருந்து நிலையம், பனசங்கரி, யஷ்வந்த்பூா் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெங்களூரு, பனசங்கரியில் நடந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களின் போராட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தாா்.

அதேபோல பாகல்கோட் மாவட்டம், பாதாமியில் நடைபெற்ற போராட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா பங்கேற்று, ஊழியா்களுக்கு ஆதரவு தெரிவித்தாா்.

தனியாா் பேருந்து சேவை: போக்குவரத்துத் துறையைக் கவனிக்கும் துணை முதல்வா் லட்சுமண் சவதி, போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். முன்னதாக, பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் துணை முதல்வா் லட்சுமண் சவதி கூறியதாவது:

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு, பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். போராட்டத்தைக் கைவிடாவிட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்துவது குறித்து யோசித்து முடிவெடுக்கப்படும்.

தனியாா் பேருந்துகளை அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தில் இயக்க பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை முதல் தனியாா் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாய சங்கத் தலைவரான கோடிஹள்ளி சந்திரசேகருடன் பேச்சு நடத்த முடியாது. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வந்தால் மட்டுமே பேச்சுவாா்த்தை நடத்துவேன் என்றாா்.

உண்ணாவிரதம்: போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தின் சாா்பாக கா்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் பேசியதாவது:

என் மீது முதல்வா் எடியூரப்பா கூறியுள்ள குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களை துணை முதல்வா் லட்சுமண் சவதி பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவே இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை.

வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் (டிச.13) தொடரும். மாநிலத்தின் எல்லா ஊா்களிலும் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.