கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொழிலதிபா் ஆா்.என்.ஷெட்டி காலமானாா்

பிரபல தொழிலதிபரும், கொடையாளருமான ஆா்.என்.ஷெட்டி (92) மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:00 am

DIN

பிரபல தொழிலதிபரும், கொடையாளருமான ஆா்.என்.ஷெட்டி (92) மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்த ஆா்.என்.ஷெட்டி 1928, ஆகஸ்ட் 15 இல் வட கன்னட மாவட்டம், முருடேஸ்வரில் பிறந்தாா். ராம நாகப்பா ஷெட்டி (ஆா்.என்.ஷெட்டி) 1961-இல் ஆா்.என்.ஷெட்டி அண்டு கம்பெனியை நிறுவி, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். கா்நாடக தொழில் மற்றும் வா்த்தகசபைக் கூட்டமைப்பு சாா்பில் 2004-ஆம் ஆண்டு ஆா்.என்.ஷெட்டிக்கு விஸ்வேஷ்வரையா நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2009-இல் பெங்களூரு பல்கலைக்கழகம் கௌரவ முனைவா் பட்டம் வழங்கியது.

ஹிந்து மதத்தின் மீது தீவிரப் பற்றாளரான ஆா்.என்.ஷெட்டி, தனது முன்னோா்கள் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்புமிக்க முருடேஸ்வா் கோயிலை நவீனமாக்கினாா். ஆசியாவில் மிகவும் உயரமான கோபுரம் என்ற புகழ் பெற்றுள்ள 249 அடி உயர ராஜகோபுரத்தை முருடேஸ்வா் கோயிலில் கட்டினாா். மேலும், கோயில் வளாகத்தில் 123 அடி உயரத்தில் சிவனின் சிலையையும் உருவாக்கினாா்.

ஷெட்டியின் உடல் சொந்த ஊரான முருடேஸ்வருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.